உயிரிழந்ததாக நம்பப்பட்ட ஒசாமா பின்லேடனின் மகன்: அல் கொய்தாவுக்கு தலைமை ஏற்பு: உளவுத்துறை தகவல்
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் அல்-கொய்தா அமைப்புக்கு தலைமை ஏற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய உளவுத்துறை தகவல்
ஒசாமா பின்லேடனின்(Osama bin Laden) மகன் ஹம்சா பின்லேடன்(Hamza bin Laden) அல்-கொய்தா (al-Qaida) தீவிரவாத அமைப்புக்கு தலைமையேற்றுள்ளதாக புதிய உளவுத்துறை தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
ஹம்சா பின்லேடன் 2019-ல் அமெரிக்காவின் வான்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக முன்பு கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஹம்சா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் புதிய பயிற்சி முகாம்களை நிறுவுவதில் கவனம் செலுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் மிரர் அறிக்கையின்படி, ஹம்சா பின்லேடனின் தலைமை கீழ் al-Qaida அமைப்பு புத்துயிர் பெற்று வருகிறது.
மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததையடுத்து அவர்களுடன் தொடர்புகளை அதிகரித்துள்ளது.
ஈரானில் தலைமறைவு
ஹம்சா பின்லேடன் மற்றும் அவரது நான்கு மனைவிகள், CIA-வின் கண்காணிப்பை தவிர்க்க பல ஆண்டுகளாக ஈரானில் தஞ்சம் புகுந்ததாக நம்பப்படுகிறது.
அவரது மரணம் குறித்த முந்தைய கூற்றுகளுக்கும், DNA உறுதிப்படுத்தல் எதுவும் வழங்கப்படவில்லை.
சமீபத்திய உளவுத்துறை தகவல்களின்படி, ஹம்சா தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பான வீடுகளைப் பயன்படுத்தி அல்-கொய்தாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் தேசிய இயக்க முன்னணி (NMF), ஹம்சா பின்லேடன் வட ஆப்கானிஸ்தானில் மறைந்திருப்பதாகவும், 450 துப்பாக்கி வீரர்களால் பாதுகாக்கப்படுவதாகவும், மேற்கத்திய இலக்குகளுக்கு எதிராக எதிர்கால தாக்குதல்களை திட்டமிட்டு வருவதாகவும் கூறுகிறது.