பிரித்தானியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம்: 3 பேரை கொன்ற 18 வயது சிறுவன் கைது!
பிரித்தானியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம்
பிரித்தானியாவின் லூட்டனில்(Luton) உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டி 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
லூட்டனின் லீபங்க்(Leabank) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு பொலிஸார் மூன்று உடல்களைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த நிக்கோலஸ் புரோஸ்பர்(Nicholas Prosper) என்ற 18 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அந்த சிறுவன் மீது மூன்று கொலை வழக்குகள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பதாக சனிக்கிழமை மாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம்
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் 48 வயதான ஜூலியானா புரோஸ்பர்(Juliana Prosper), அவரது குழந்தைகளான 16 வயதான கைல் புரோஸ்பர்(Kyle Prosper) மற்றும் 13 வயதான ஜிசெல்லி புரோஸ்பர்(Giselle Prosper) என்று பொலிஸார் நம்புகின்றனர்.
இந்நிலையில் காவலில் வைக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் புரோஸ்பர், திங்கட்கிழமை லூட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.