எகிப்தில் நேருக்கு நேர் மோதிய இரண்டு ரயில்கள்: 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
எகிப்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ரயில் விபத்து
எகிப்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கெய்ரோவிற்கு (Cairo) வடகிழக்கில் உள்ள ஜாக்ஸிக் நகரில்(Zagazig) நடந்த இந்த விபத்தில் மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எகிப்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, படுகாயமடைந்தவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வீடியோ காட்சிகள்
இந்த விபத்து தொடர்பாக வெளியான வீடியோவில், காயமடைந்தவர்களை ரயிலின் ஜன்னல்களின் வழியாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது.
ரயில்வே அதிகாரி கூறுகையில், ஒரு ரயில் ஜாக்ஸிகிலிருந்து(Zagazig) இஸ்மாயிலியாவுக்கு(Ismailia) சென்று கொண்டிருந்தது, மற்றொன்று மன்சுராவிலிருந்து(Mansoura) ஜாக்ஸிகிற்கு(Zagazig) சென்று கொண்டிருந்தது.
எகிப்தில் பழைய ரயில்வே அமைப்புகளே இருப்பதால் அங்கு விபத்துகள் அசாதாரணமானவை அல்ல.