கருப்பு திராட்சையை தினமும் சாப்பிடலாமா? அதிசயத்தை கண்கூடாக காணலாம்
கருப்பு திராட்சையில் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கருப்பு திராட்சை
கருப்பு திராட்சையில் பல சத்துக்கள் அடங்கியுள்ள நிலையில், உடம்பிற்கு தேவையான ஆற்றலையும் அளிக்கின்றது. இதில் வைட்டமின் சி, கே, ஏ, பி6, போன்றவை உள்ளது.
இதில் உள்ள வைட்டமின் சி இரும்பு சத்து மற்றும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கின்றது. வைட்டமின் கே எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், ரத்தம் உறைதலையும் கட்டுப்படுத்துகின்றது.
மேலும் வைட்டமின் ஏ கண்ணின் பார்வை மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கின்றது. மேலும் வைட்டமின் பி6 நரம்பு மண்டலம் மற்றும் மூளை செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கின்றது.
உடலுக்கு தேவையான அன்டி ஆக்ஸிடெண்ட்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்களையும் வழங்குகின்றன.
நன்மைகள் என்ன?
கருப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் என்ற பொருளானது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்தக்கட்டி உருவாகாமல் தடுக்கின்றது.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தவும், பல தொற்று நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றது.
கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கண் நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றது. நல்ல கொழுப்புசத்துக்களை அதிகரிக்கவும் உதவுகின்றது.
மார்பு புற்றுநோய், நீரிழிவு போன்ற நீண்டகால நோய் தொற்றுகளிலிருந்து தடுப்பதற்கு உதவுகின்றது.
சருமத்தை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைத்திருப்பதற்கு உதவுவதுடன், தினமும் இதனை எடுத்துக்கொண்டால் பல நோய்களிலிருந்தும் தப்பிக்க முடியும்.