;
Athirady Tamil News

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு ஓய்வூதியம்!

0

வெளிநாடுகளில் வருடக்கணக்கில் தொழில் புரிந்து எமது நாட்டுக்கு டொலர்களை பெற்றுத்தரும் எமது நாட்டு மக்களுக்கு அவர்கள் தொழில் செய்ய முடியாத காலத்தில் ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவை எதிர்காலத்தில் வழங்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரணிலின் உதவித் திட்டங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியின் போதும் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமுர்த்திக்காக இதுவரை வழங்கப்பட்டு வந்த 60 பில்லியன்களை, சுமார் 180 பில்லியன்களாக அதிகரித்து 24 இலட்சம் குடும்பங்களுக்கு “அஸ்வெசும“ நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தார்.

அவசர நிதித்தேவைக்கும் பயன்படாது இருந்த காணி அனுமதிப் பத்திரங்களுக்கு பதிலாக முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களை “ உறுமய” வேலைத்திட்டத்தின் ஊடாக 20 இலட்சம் பேருக்கு வழங்கியவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

உண்மையில் ஏழையின் தோழன் ரணில் விக்ரமசிங்க அவர்களே. அதுபோல் பெருந்தோட்ட மக்களுக்கும் காணி உரிமை வழங்கவும், லைன் அறைகளுக்குப் பதிலாக கிராமங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுத்தார்.

அதேபோன்று, வெளிநாடுகளில் வருடக்கணக்கில் தொழில் புரிந்து எமது நாட்டுக்கு டொலர்களை பெற்றுத்தரும் எமது நாட்டு மக்களுக்கு அவர்கள் தொழில் செய்ய முடியாத காலத்தில் ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவை எதிர்காலத்தில் வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.

மேலும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலும் அவர் அவதானம் செலுத்தியுள்ளார். ஆகவே இவை மாத்திரமன்றி எதிர்காலத்தில் எமது நாட்டைக் கட்டியெழுப்ப மீண்டும் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.