;
Athirady Tamil News

கோட்டாபயவின் ஆதரவாளர்களுக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை

0

2019 பொது தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) ஆதரித்த 6.9 மில்லியன் வாக்காளர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை இரத்தினபுரியில் (Ratnapura) நேற்று (15) இடம்பெற்ற ரணிலால் இயலும் வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் நெருக்கடியின் போது அவர்கள் இல்லாததை எடுத்துக்காட்டிய ரணில் நாடு நெருக்கடியில் இருந்த போது இந்த 38 வேட்பாளர்கள் எங்கே இருந்தார்கள் என கோள்வி எழுப்பியுள்ளார்.

சமையல் எரிவாயு
அந்த நேரத்தில் யாரும் இல்லை எனவும், சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தப்பி ஓடிவிட்டார் மற்றும் அநுரகுமார திசாநாயக்கவை (Anurakumara Dissanayake) எங்கும் காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உணவு, மருந்து மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றுக்கு மக்கள் கடுமையான தட்டுப்பாடுகளை எதிர்கொண்ட நெருக்கடியான காலக்கட்டத்தில் கலந்துகொள்ளாத அதேவேளை தற்போதைய நிலைமை குறித்து தனது எதிர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களுக்கு உண்பதற்கு எதுவும் இல்லாத போது அவர்கள் படும் வேதனையை அவர்கள் உணரவில்லையா ? மக்களுக்கு மருந்து இல்லாத போது அவர்கள் வலியை உணரவில்லையா? சமையல் எரிவாயு இல்லாதபோது அவர்கள் வலியை உணரவில்லையா? அவர்கள் வலியை உணரவில்லையா? மக்கள் நீண்ட நாட்கள் வரிசையில் இருந்த போது, ​​​​அவர்களின் வலி அந்த நேரத்தில் விடுமுறையில் இருந்ததா ?

கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனக்கு ஆதரவாக இருந்த தனது அணி, நெருக்கடியின் போது பொறுப்பேற்று நாட்டை உயர்த்தப்பாடுபட்டனர்.

ஆதரவாளர்கள்
எங்களுக்கு முன்பிருந்த தலைவர்களிடம் இருந்து பெற்ற பயிற்சியின் மூலம் நாங்கள் செயல்பட்டோம் இன்று நாட்டைப் பாதுகாத்து தேர்தலுக்குச் செல்கிறோம்.

திசைகாட்டியினால் அடையாளப்படுத்தப்பட்ட எதிர்ப்பை ஆதரிப்பதை விட கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஒன்றிணைய வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், கட்சியின் பெரும்பான்மையானவர்கள் நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து பங்களிக்கின்றனர்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெறும் மாற்றத்தை மட்டும் கோரவில்லை நாட்டில் முழு அளவிலான புரட்சியை ஏற்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.