;
Athirady Tamil News

ராஜ குடும்பத்தினர் விமானத்தில் பறக்கும்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்படால்… உடன் கொண்டு செல்லும் அந்தப் பொருள்

0

மகாராணியார் மரணமடைந்தபோது, இளவரசர் வில்லியம் பயணித்த விமானப்படை விமானத்தில் ஏற ஹரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.

பின்னர், அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளதாக கூறப்பட்டது. அதாவது, இரண்டு இளவரசர்களும் ஒரே விமானத்தில் பயணிக்கும்போது, விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டால், ஒரே நேரத்தில் நாடு இரண்டு இளவரசர்களையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே அப்படி ஒரு மரபு பின்பற்றப்படுவதாக தகவல் வெளியானது.

ராஜ குடும்பத்தினர் பின்பற்றவேண்டிய மரபுகள்
இளவரசர் வில்லியமுடைய மூத்த மகனான குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு 12 வயதாகும்போது, அவரும் அவரது தந்தையும் ஒரே விமானத்தில் சேர்ந்து பறக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஆக, ராஜ குடும்பத்தினர் பயணம் செய்யும்போது கடைப்பிடிக்கவேண்டிய மரபுகள் பல உள்ளன.

அவற்றில் ஒன்று, ராஜ குடும்பத்தினர் விமானத்தில் பறக்கும்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்படால் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்ததாகும்.

மன்னரோ மகாராணியாக விமானத்தில் வேறொரு நாட்டுக்குப் பயணிக்கும்போது, அவர்களுடன் ஒரு மருத்துவரும் செல்வாராம்.

மன்னர் அல்லது மகாராணிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இரத்தம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படுமானால், அதற்காக முன்கூட்டியே தயாராக இரத்தமும் உடன் கொண்டு செல்லப்படுமாம்.

அத்துடன், அந்த மருத்துவர், மன்னர் அல்லது மகாராணியார் செல்லும் நாடுகளில் எங்கெங்கு மருத்துவமனைகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து அது குறித்த தகவல்களை தயாராக வைத்துக்கொள்வாராம்.

மேலும், தாங்கள் பயணிக்கும் நாடுகளில் மன்னர் அல்லது மகாராணிக்கு இரத்தம் கிடைப்பது சந்தேகம் என்றால், அவர்களுடன் செல்லும் மருத்துவர், அவர்கள் இரத்தத்தை முன்கூட்டியே சேகரித்து வைத்துக்கொண்டு, அவர்களுடன் பயணிப்பாராம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.