மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே கணவன் குளிப்பதால் விவாகரத்து கோரிய மனைவி
மாதம் ஒரு முறை மட்டுமே கணவன் குளிப்பதால் திருமணமான 40 நாட்களிலேயே மனைவி விவாகரத்து கோரியுள்ளார்.
விவாகரத்து கோரிய மனைவி
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மாதம் ஒரு முறை மட்டுமே குளிப்பதால் விவாகரத்து கோரியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், “எனது கணவர் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குளிக்கிறார். இதனால் அவர் மீது தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்த காரணத்தால் திருமணமான 40 நாட்களிலேயே அவரை விட்டு பிரிவதற்கு முடிவு செய்துள்ளேன்” என்றார்.
இந்த பெண்ணின் கணவர் ராஜேஷ் என்பவர் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் கங்கை நதியில் இருந்து வரும் தண்ணீரை தெளித்துக் கொள்கிறார்.
இவருக்கு திருமணமான 40 நாட்களில் மனைவியின் வற்புறுத்தலால் மட்டுமே 6 முறை குளித்துள்ளார்.
இதனால், பெண்ணின் வீட்டார் வரதட்சணை கொடுமை என்று பொலிஸில் புகார் அளித்து விவாகரத்து கோரி வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து, கணவர் மனம் திருந்தி தனிப்பட்ட சுகாதாரத்தை மேம்படுத்த ஒப்புக்கொண்டார்.
இருந்தாலும் அந்த பெண் தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறியுள்ளார். பின்னர் இருவரும் ஆலோசனை மையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.