மாதுளம்பழத்தின் சிறு விதையில் மறைந்திருக்கும் ஆரோக்கியம் – தினம் ஓர் கரண்டி போதும்..
மாதுளை பழமானது ஆசியாவில் விளையக்கூடிய ஒரு பழமாகும். ஆனால் அமெரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதி உட்பட உலகின் பல பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
மாதுளையின் விதைகள் இனிப்பு, சற்று புளிப்பு சுவை கொண்டவை மற்றும் பலவிதமான ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது.
இது செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்தத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆனால் உங்களுக்கு மாதுளை பழத்தில் உள்ள சிறு விதையில் நன்மை குறித்து தெரியுமா?
காலையில் 4 டீஸ்பூன் மாதுளை விதைகளை எடுத்துக் கொண்டால், அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், எடை இருமடங்காக குறைகிறது. இது தவிர, முடி வளர்ச்சி நன்றாக இருக்கும், நினைவாற்றலும் அதிகரிக்கிறது.
எப்போது சாப்பிட வேண்டும்?
இதை காலையில் வெறும் வயிற்றில் அல்ல, காலை உணவுக்குப் பிறகு சாப்பிடவும். மாதுளம் பழச்சாறு மற்றும் விதை இரண்டும் ஊட்டச்சத்து பண்புகள் நிறைந்தவை.
ஒரு கப் அல்லது கிளாஸ் சாறு 0 கிராம் புரதம், 0.7 கொழுப்பு, 33 கிராம் கார்போஹைட்ரேட், 0 கிராம் நார்ச்சத்து, 533 mg பொட்டாசியம், 60 mg ஃபோலேட் மற்றும் 22 mg சோடியம் ஆகியவற்றை வழங்குகிறது.
அதே நேரத்தில், 3/4 கப் மாதுளை விதைகள் 2 கிராம் புரதம், 2 கிராம் கொழுப்பு, 26 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் நார்ச்சத்து, 15 மில்லிகிராம் வைட்டமின் சி, 280 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் பூஜ்ஜிய மில்லிகிராம் சோடியம் ஆகியவற்றை வழங்குகிறது.
எனவே மாதுளைப்பழத்தில் உள்ள விதைகளை நீங்கள் தினமும் சாப்பிடுங்கள். இது உங்கள் உடலை எப்போதும் ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்கும்.