பிரசாரங்களின் போது பயன்படுத்தப்படும் முதலீட்டாளர்களின் பெயர்கள்: நாமலின் கோரிக்கை
இலங்கையின் முதலீட்டாளர்களின் பெயர்கள் மற்றும் விபரங்களைத் தமது தேர்தல் பிரசாரக் கோசங்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஏனைய வேட்பாளர்களிடம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
மினுவாங்கொடையில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அவர், அரசியல்வாதிகள் கருத்துக்களையும் சித்தாந்தங்களையும் பரிமாறிக்கொண்டு தமது பிரசாரங்களை தொடரவேண்டும்.
இதன்போது, முதலீட்டாளர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
உலகப் பொருளாதாரம்
பெயர்கள் அல்லது தனிநபர்கள் மீது கவனம் செலுத்தாமல், மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய, தேவையான டொலர்களை கொண்டு வரக்கூடிய, நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய மற்றும் சரியான முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, முதலீட்டாளர்கள் சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா அல்லது மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களா என்பது முக்கியமல்ல. மாறாக அவர்கள் உலகப் பொருளாதாரத்தில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பது முக்கியம் என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.