மௌனப் புரட்சிக்கு அணியாவோம்: யாழ் வடமராட்சி ஊடக இல்லம் அழைப்பு!
சிதறடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளவும் தமிழ்த் தேசியத்தின் வழியே தேசமாக ஒன்றிணைக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சியானது தமிழர் ஒற்றுமையின் வாடிவாசலாகும் என யாழ் வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் இரா மயூதரன் தெரிவித்துள்ளார்.
மேலும், செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறப்போகும் மௌனப் புரட்சியில் விடுதலையின் விழுதுகளாக அணிவோம் எனவும் மயூதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து யாழ் வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் இரா.மயூரதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் போராட்ட வரலாறு
மேலும், முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னரான கடந்த 15 ஆண்டுகளில் தமிழர் போராட்ட வரலாற்றின் தாங்கு தூண்களாக விளங்கும் மாபெரும் மக்கள் சக்தியானது, நிலத்திலும் புலத்திலும், அமைப்புகளாகவும், குழுக்களாகவும், இயக்கங்களாகவும், கட்சிகளாகவும் சிதறடிக்கப்பட்டுள்ளது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையிலேயே தமிழர் ஒற்றுமை சிதைக்கப்பட்டு பிழைப்புவாத அரசியல் மேலாங்கிவருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.