இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை
இந்தியாவில் வெளியாகியுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில், ஒரு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரம் இன்ஸ்டிடியூசனல் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 63 சதவீதம் அதிகரித்துள்ளது.
முன்னோக்கி செல்லும் பொருளாதாரம்
இந்த தகவல், இந்தியாவின் பொருளாதாரம் முன்னோக்கி செல்வதை சுட்டிக்காட்டுகிறது.
தற்போது, இந்தியாவில் சுமார் 31,800 பேர், ஒரு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கின்றனர்.
இது, கடந்த 5 ஆண்டுகளில் 63 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல, ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 58,200 ஆக அதிகரித்து, 49 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஒரு ஆண்டுக்கு 50 இலட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 10 இலட்சம் பேரை எட்டியுள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.