;
Athirady Tamil News

பிரதமர் மோடியை சந்திப்பேன்…! டொனால்ட் டிரம்ப் திடீர் அறிவிப்பு

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளார்.

இதனை மிச்சிகன் – ஃப்ளின்ட் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் (donald Trump) தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

அமெரிக்கா சுற்றுப்பயணம்
வரும் 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை 3 நாட்கள் அமெரிக்காவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் ஒரு பகுதியாக, செப்.23 ஆம் திகதி ‘Summit of the Future’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி, ஐ.நா சபையில் உரையாற்றுகிறார்.

அந்நிகழ்வில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். மாநாட்டுக்கு இடையே, பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்கா வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நரேந்திர மோடியை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.