;
Athirady Tamil News

கனடாவில் பிரதமர் ட்ரூடோவிற்கு வலுக்கும் நெருக்கடி : மற்றுமொரு தொகுதியிலும் படுதோல்வி

0

கனடாவில்(canada) இடம்பெற்ற மற்றுமொரு இடைத்தேர்தலில், முக்கியமான மற்றொரு தொகுதியையும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) சார்ந்த லிபரல் கட்சி இழந்துள்ளது.

இதனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு சொந்தக்கட்சிக்குள்ளேயே பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கனடாவின் Toronto-St. Paul’s தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது. கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான Don Stewart, லிபரல் கட்சியின் கோட்டை என கருதப்படும் அத்தொகுதியிலேயே, லிபரல் கட்சி வேட்பாளரான Leslie Church என்பவரை 590 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார்.

30 வருடங்களாக இருந்த தொகுதி பறிபோனது
Don Stewartஇன் வெற்றி, லிபரல் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.30 ஆண்டுகளாக அத்தொகுதி லிபரல் வசம் இருந்த நிலையில், கொன்சர்வேட்டிவ் கட்சியினர் Toronto-St. Paul’s தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்கள்.

இந்நிலையில், மொன்றியலிலுள்ள, LaSalle-Émard-Verdun தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது.

பிரதமராக நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை
அடுத்தடுத்து ட்ரூடோ கட்சி சந்தித்துவரும் தோல்விகள், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே கட்சித் தலைமையிலிருந்து ட்ரூடோ விலகவேண்டும் என எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், மீண்டும் ஒரு இடைத்தேர்தலில் அவரது கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளதால் அவர் பதவி விலகவேண்டும் என அழுத்தம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.