;
Athirady Tamil News

ஐரோப்பிய நாடொன்றில் கைதான உக்ரைன் குத்துச்சண்டை சேம்பியன்: கொந்தளித்த ஜெலென்ஸ்கி

0

உலக குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான உக்ரைனின் Oleksandr Usyk போலந்து விமான நிலையத்தில் கைதான நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரை இனி கைது செய்ய முடியாது
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது டெலிகிராம் செயலியில் இந்த விவகாரம் குறித்து பதிவு செய்துள்ளார். உக்ரைன் குடிமகன் மற்றும் சேம்பியன் மீதான இந்த அணுகுமுறை கோபத்தை ஏற்படுத்தியதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரும் அவரை இனி கைது செய்ய முடியாது என்றும் ஜெலென்ஸ்கி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 37 வயதான Oleksandr Usyk ஏன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

அவரது மனைவி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடுகையில், இந்த விவகாரம் தொடர்பில் Oleksandr Usyk கண்டிப்பாக ஊடகங்களை சந்திப்பார் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு புறப்படும் நிலையில் போலந்தின் Krakow விமான நிலையத்தில் வைத்து ராணுவ அதிகாரிகளால் Oleksandr Usyk கைதான காட்சிகள் வெளியாகியிருந்தது. போலந்தின் உள்விவகார அமைச்சர் அல்லது வெளிவிவகார அமைச்சர் என எவரும் இதுவரை விளக்கமளிக்கவில்லை.

அவமானப்படுத்தும் செயல்
தனது இஸ்டாகிராம் பக்கத்தில் Oleksandr Usyk குறிப்பிடுகையில், நண்பர்களே ஒரு தவறான புரிதல் காரணமாக கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது, அது விரைவில் தீர்க்கப்பட்டது. அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி என பதிவு செய்திருந்தார்.

இதனிடையே உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha தெரிவிக்கையில், போலந்து அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதாகவும், தங்கள் நாட்டவரான சேம்பியனை கைது செய்துள்ளது அவமானப்படுத்தும் செயல் என குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Oleksandr Usyk குத்துச்சண்டையில் மிக உயரிய வெற்றியென கருத்தப்படும் நான்கு பட்டங்களையும் ஒரே நேரத்தில் தக்கவைத்து வருகிறார். மட்டுமின்றி, தோல்வியே கண்டிராத வீரர் என்றும் அறியப்பட்டு வருகிறார். Oleksandr Usyk-ன் தொண்டு நிறுவனமானது உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு போர்க்களத்தில் உதவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.