மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்… விமான சேவைகளை ரத்து செய்யும் ஏர் பிரான்ஸ்
பிரான்சின் Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கில் இரண்டு முக்கிய நாடுகளுக்கான விமான சேவைகளை ஏர் பிரான்ஸ் ரத்து செய்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
மத்திய கிழக்கு நாடுகளில் நாளுக்கு நாள் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளதாக ஏர் பிரான்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் லெபனானின் பெய்ரூட் ஆகிய நகரங்களுக்கு செப்டம்பர் 19 வரையில் விமான சேவைகளை ரத்து செய்வதாக ஏர் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
மேலும், நிலைமையை கண்காணித்த பின்னர் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை லுஃப்தான்சா குழுமமும் தங்கள் விமான சேவைகள் அனைத்தும் டெல் அவிவ் மற்றும் தெஹ்ரான் நகர எல்லைகளை கடந்து செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இனி பெரிதாக வெடிக்கும்
லெபனானில் ஹிஸ்புல்லா படைகள் இறக்குமதி செய்த 5,000 பேஜர்களில் இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பு வெடிக்கும் கருவியை பொருத்தி, சுமார் 3,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடிக்க வைத்துள்ளது.
இதில் 9 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் இனி பெரிதாக வெடிக்கும் என்றே கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு பதிலடி உறுதி என்றே ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது