;
Athirady Tamil News

புடினைவிட பயங்கரம்… பிரித்தானிய அமைச்சர் பேசியுள்ள முக்கிய விடயம்

0

கோடைக்காலம் முடிந்த பின்பும் வெயில் குறைந்தபாடில்லை, குளிர்காலத்தில் பனி பொழியும் அழகான சுற்றுலாத்தலங்களில் பனியைக் காணோம்.

கண்ட நேரத்துக்கு மழை பெய்து பெருவெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன சில நாடுகள். சில நாடுகளிலோ வெப்பம் காரணமாக காட்டுத்தீ பற்றி எரிகிறது. எல்லாவற்றிற்கும் இந்த புவி வெப்பமயமாதல்தான் காரணம்!

புடினைவிட பயங்கரம்…
இவ்வளவு காலமும் புவி வெப்பமயமாதல் குறித்து வெறுமனே பேசிக்கொண்டே இருந்துவிட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காத தலைவர்களால் பல நாடுகள் இன்று வெயிலாலும் மழையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரித்தானிய வெளியுறவுச் செயலர் புவி வெப்பமயமாதல் குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்.

பிரித்தானியாவில் கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்றபின், அவரது அமைச்சரவையில் வெளியுறவுச் செயலராக பொறுப்பேற்றுள்ள டேவிட் லாம்மி (David Lammy), புவி வெப்பமயமாதல், பயங்கரவாதத்தையும், புடினையும்விட பயங்கரமானது என்று கூறியிருக்கிறார்.

பங்களாதேஷில் பெருவெள்ளம், மியான்மரில் மண்சரிவு என புவி வெப்பமயமாதல் காரணமாக இயற்கைப் பேரழிவுகள் பல உயிர்களை பலிவாங்கியுள்ளன.

இந்நிலையில், இந்த மோசமான விளைவுகளுக்குக் காரணம், அரசியல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் தோல்வி என வெளிப்படையாக பேசியுள்ளார் டேவிட்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல இருந்தாலும், இப்படி ஒருவராவது புவி வெப்பமயமாதல் குறித்து கவலை தெரிவித்துள்ளது ஆறுதலையளிப்பதாக உள்ளது.

என்றாலும், பேசுவதுடன் விட்டுவிடாமல், அரசு நடவடிக்கைகள் எடுத்தால் நல்லது. விடயம் என்னவென்றால், ஒரு நாடு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது.

ஒவ்வொரு நாடும் இன்று நாம் அனுபவிக்கும் மோசமான வானிலை, இயற்கைப் பேரழிவுகளுக்கு புவி வெப்பமயமாதல்தான் காரணம் என்பதை உணர்ந்து இப்போதே நடவடிக்கை எடுக்கத் துவங்கினால்தான், நமது சந்ததிகள் நிம்மதியாக வாழமுடியும் என்பதில் சந்தேகமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.