;
Athirady Tamil News

இம்ரான் கானின் குற்றங்கள் சிறையில் இருக்க போதுமானது: கவாஜா ஆசிஃப்

0

முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் (imran khan) குற்றங்கள் அவர் சிறையிலேயே இருப்பதற்கு போதுமானது என பாகிஸ்தான் (Pakistans) பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பலவேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தன்னை தொடர்ந்து சிறையில் வைப்பதற்கான அரசியலமைப்பை மாற்ற அரசு முயற்சிக்கிறது என இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியலமைப்பு
கடந்த 2022-ம் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இருந்து அவர் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு இருந்தது.இந்நிலையில் இம்ரான் கானின் குற்றங்கள் சிறையில் அடைப்பதற்கு போதுமானது என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் (Khawaja Asif) தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த கவாஜா ஆசிஃப் “பிடிஐ கட்சி நிறுவனர் இம்ரான் கானின் குற்றங்களுக்கான நீண்ட பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு மாற்றம் தேவைப்படதாது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர், அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுடன் மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் நடக்கும் அனைத்திலும் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்” என குறிப்பிட்டள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.