3 ஆம் உலக போருக்கான அறிகுறி: அணு ஆயுத வீச்சுக்கு இடத்தை தேர்ந்தெடுத்த ரஷ்யா
ரஷ்ய – உக்ரைன் போர் முடிவிலியாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த போரில் ரஷ்யா (Russia) எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அணு ஆயுதத்தை கையில் எடுக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யா அணுகுண்டு வீசுவதற்கு முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருப்பதாகவும், அதனை வீசுவதற்கான இடத்தையும் தெரிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளன.
உக்ரைன் (UKraine) போரை தொடர்ந்து, ரஷ்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அந்நாட்டுக்கு அமெரிக்கா (US) உட்பட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
புடினின் எச்சரிக்கை
மேலும், ரஷ்யாவை சமாளிப்பதற்கு தேவையான அனனத்து விதமான ஆதரவுகளையும் அமெரிக்கா வழங்கி வருகிறது.
இந்த விடயங்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை இன்னும் ஆத்திரமடைய செய்துள்ளதுடன், இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தலையிடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.
அதாவது உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்தால் அணுகுண்டு வீசுவோம் என்பதை வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக ரஷ்யா தெரிவித்து வருகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், திடீரென ரஷ்யா அணுகுண்டை வீசுவதற்கு முழுவீச்சில் தயாராகி வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுளள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்
கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி, குறித்த அணுகுண்டை ஆர்க்டிக் (Arctic) பகுதியில் வீசுவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆர்டிக் பகுதியானது, ரஷ்யா சார்பில் 1990க்கு முன்பு அணுஆயுத சோதனை நடத்த பயன்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் இந்த இடம் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதன் படி, குறித்த இடத்தை ரஷ்யா தேர்வு செய்து சோதனை நடத்த முடிவு செய்துள்ளதையடுத்து, நிச்சயம் ரஷ்யா அணுஆயுத சோதனையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.