உலகை மீண்டும் உலுக்கும் கொரோனா: புதிய XEC வைரஸ் அச்சுறுத்தல்!
2019-ல் உலகை உலுக்கிய கொரோனா வைரஸ், தற்போது புதிய வடிவில் தலை தூக்கி உள்ளது.
புதிய கொரோனா வகை XEC
XEC எனப்படும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ், ஏற்கனவே 27 நாடுகளில் பரவியுள்ளது.
இது உலக அளவில் புதிய தொற்றுநோய்க்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எங்கெல்லாம் பரவியுள்ளது?
ஜேர்மனியில் முதன்முதலில் கண்டறியப்பட்ட XEC வைரஸ், தற்போது பிரித்தானிய, அமெரிக்கா, நெதர்லாந்து, போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் உள்ளிட்ட 27 நாடுகளுக்கு பரவியுள்ளது. இது மூன்று கண்டங்களில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகள் என்ன?
XEC வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மற்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை வலி, இருமல், வாசனை உணர இயலாமை போன்றவை ஏற்படலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது, புதிய வகை வைரஸில் இருந்து உங்களை பாதுகாக்கும் முக்கிய வழி.
ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவது.