உலகின் பணக்கார பெண்கள் பட்டியல்: இரண்டாவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறிய பெண்
உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் இதுவரை இரண்டாவது இடத்திலிருந்த ஒரு பெண், முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
யார் அவர்? அவரது சொத்து மதிப்பு எவ்வளவு?
அவரது பெயர், ஆலிஸ் வாட்சன் (Alice Walton, 74). வால்மார்ட் நிறுவனரான சாம் வாட்சனுடைய மகள்தான் இந்த ஆலிஸ் வாட்சன்.
அமெரிக்கரான அவரது சொத்து மதிப்பு 89.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
விடயம் என்னவென்றால், உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் வகித்தவர் பிரான்ஸ் நாட்டவரான Françoise Bettencourt Meyers (69) என்னும் பெண் ஆவார்.
அவர், L’Oréal நிறுவனத்தை நிறுவியவரான Eugène Schueller என்பவரின் பேத்தி ஆவார்.
தற்போது, ஆலிஸ், உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் Françoiseஐ பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் ஒரு இந்தியப் பெண்மணியும் இருக்கிறார். பட்டியலில் ஆறாவது இடத்திலிருக்கும் அவரது பெயர் சாவித்ரி தேவி ஜிண்டால் (Savitri Devi Jindal, 74).
சாவித்ரி, O.P. Jindal குழுமத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது சொத்து மதிப்பு 33.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.