;
Athirady Tamil News

திருமணத்தில் கிடைத்த மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை அறக்கட்டளைக்கு கொடுத்த மணமக்கள்!

0

மொய்ப் பணம் ரூ.1.91 லட்சத்தை புற்றுநோய் பிரிவு கட்டடத்துக்கு நன்கொடையாக மணமக்கள் அளித்துள்ளனர்.

மணமக்கள் நன்கொடை
தமிழக மாவட்டமான தேனி, சொக்கம்பட்டி வேல்மணி கல்யாண மண்டபத்தில் ஹரிகரன் மற்றும் தேன்மொழி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்த உறுப்பினர்கள் பலரும் மொய் செய்தனர்.

பொதுவாகவே மொய் பணத்தை வைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களுக்கும், திருமண செலவிற்காகவும் பயன்படுத்துவார்கள்.

ஆனால், இந்த மணமக்கள் தங்களுடைய திருமணத்தில் சேர்ந்த ரூ.1.91 லட்சம் மொய் பணத்தை மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை தன்னார்வ நிறுவனத்தில் புற்றுநோய் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு நன்கொடையாக அளித்துள்ளனர்.

இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் டாக்டர் பாலகுரு கூறுகையில், “எங்களுடைய நிறுவனத்தின் சேவையை அறிந்த மணமக்கள், விளாச்சேரியில் உள்ள நேத்திராவதி வலி நிவாரணம் மையத்தில் உள்ள ஆதரவற்ற நோயாளிகளுக்கு உதவுவதற்காக இந்த நிதியை வழங்கியுள்ளனர்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.