புத்தளத்தில் கடையொன்றிலிருந்து மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான வாக்காளர் அட்டைகள்
புத்தளத்தில்(Puttalam) விநியோகிக்கப்படவிருந்த 147 உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அந்தப் பகுதியிலுள்ள கடையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் தபால் மா அதிபர் எச்.எப்.அமீர் தெரிவித்தார்.
அந்தப்பகுதியில் வசிப்பவர்களுக்கு இந்த வாக்குச் சீட்டுகள் விநியோகம் செய்யப்படவிருந்தன. இது தொடர்பில் விசேட விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சீட்டை வேறு ஒருவருக்கு வழங்க முடியாது
எவ்வாறாயினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டை வேறு ஒருவருக்கு வழங்க முடியாது என தேர்தல் விதிகளில் உறுதியாக கூறப்பட்டுள்ள போதிலும், இவ்வாறு வாக்குச் சீட்டுகளை விநியோகிப்பது பாரதூரமான குற்றமாகும் என தபால் நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை களுத்துறையில் தபால் உத்தியோகத்தர் ஒருவர் விநியோகிக்காமல் வைத்திருந்த 900 வாக்காளர் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.