;
Athirady Tamil News

சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பு ஆரம்பம்

0

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அமைதியான காலப்பகுதியில் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் பியூமி அடிகல தெரிவித்துள்ளார்.

ஐந்து பேர் கொண்ட குழு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் அறிக்கைகளின்படி, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள் அகற்றப்படும் என்று அவர் கூறினார்.

கைத்தொலைபேசிகளை பயன்படுத்த தடை
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட இடங்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கு சாவடிகளில் தடை செய்யப்பட்ட செயற்பாடுகள்
வாக்கு சாவடிகளில் ஆயுதங்களை வைத்திருப்பது, புகைத்தல், மதுபானம் அருந்துதல் மற்றும் போதைப்பொருள் பாவனை போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.