கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
கனடாவில் (Canada) வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கனடாவில் பல வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி படித்து வருவதுடன் வெளிநாட்டை சேர்ந்த பலர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தநிலையில், கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதாக அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச மாணவர்கள்
இது தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ மேலும் தெரிவிக்கையில், “இந்த ஆண்டு சர்வதேச மாணவர்களுக்கு 35 சதவீதத்துக்கு குறைவான அனுமதி வழங்குகிறோம்.
அடுத்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் குறையும் அத்தோடு குடியேற்றம் நமது பொருளாதாரத்திற்கு ஒரு நன்மை ஆனால் அதை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் போது நாங்கள் ஒடுக்குகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் 2023 ஆம் ஆண்டு 5.09 லட்சம் பேருக்கும், 2024 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 1.75 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், தற்போதைய கட்டுபாட்டால் 2025 ஆம் ஆண்டு வெளி நாட்டினருடைய எண்ணிக்கை 4.37 லட்சமாக குறைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.