அதிகரித்துவரும் உணவுப்பொருட்கள் விலை: பிரான்சின் கடல் கடந்த பிரதேசம் ஒன்றில் ஊரடங்கு
பிரான்சின் கடல் கடந்த பிரதேசம் ஒன்றில், அதிகரித்துவரும் உணவுப்பொருட்கள் விலையை எதிர்த்து பல நாட்களாக மக்கள் போராட்டங்கள் நடத்திவருகிறார்கள்.
பிரான்சின் கடல் கடந்த பிரதேசம் ஒன்றில் ஊரடங்கு
பிரான்சின் கடல் கடந்த பிரதேசங்களில் ஒன்று, Martinique என்னும் தீவாகும்.
கடந்த பல நாட்களாக, அத்தீவு மக்கள், அதிகரித்துவரும் உணவுப்பொருட்கள் விலையை எதிர்த்து போராட்டங்கள் நடத்திவருகிறார்கள்.
போராட்டங்களின்போது ஆறு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தீவின் பல இடங்களில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
இரவு 9.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என பிரான்ஸ் வானொலி தெரிவித்துள்ளது.