நாயால் கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரீதம் ; 10 லட்சம் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு
சீனாவில் லீ என்பவரின் நாய், 41 வயதான கர்ப்பிணியை பயமுறுத்தியதால் அவரின் 4 மாத கரு கலைந்துள்ளது.
கர்ப்பமடைவதற்காக மூன்று வருடங்களுக்கும் மேல் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தையை இழந்ததாக யான் என்ற பெண் வேதனை அடைந்துள்ளார்.
இதனையடுத்து நாயின் உரிமையாளர் லீ மீது அப்பெண் வழக்கு தொடர்ந்தார்.
பொது இடங்களில் நாயை கட்டி வைக்காமல் அவிழ்த்து விட்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கர்ப்பிணிக்கு இழப்பை ஏற்படுத்தியதால் அவருக்கு சுமார் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று லீக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.