;
Athirady Tamil News

வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களுக்கு தடைவிதித்த கத்தார் ஏர்வேஸ்

0

பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து (Beirut-Rafic Hariri International Airport) விமானங்களில் வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களை எடுத்துச் செல்ல கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனம் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு முதல் இஸ்ரேல் (Israel) – பலஸ்தீனம் (Palestine) இடையே போர் நடந்து வருகிறது. பலஸ்தீனத்தின் ஹமாஸ் (Hamas) அமைப்புக்கு, லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு தெரிவித்தது.

மின்னணு சாதனங்கள்
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது.

இந்நிலையில் கடந்த 17ஆம் திகதி லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலின் போது ஆயிரக்கணக்கான மின்னணு சாதனங்கள் வெடித்து சிதறியது.

இதனையடுத்து லெபனான் சிவிலியன் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவுறுத்தலின்படி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெய்ரூட் ராஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BEY) புறப்படும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்தது.

மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சுமூகமான பயணத்தை உறுதிசெய்ய பயணிகள் இந்த விதிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.