மீன் மற்றும் மரக்கறி வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
பேலியகொட மெனிங் சந்தைக்குள் நுழையும் வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மீன் மற்றும் மரக்கறி வாங்குவதற்காக மக்கள் குவிந்துள்ள நிலையில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வாகனங்கள் பல கிலோ மீற்றர் தூரத்திற்கு வரிசையில் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் முன்கூட்டிய பொருட்களை சேமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.