டிரம்ப் பேரணியில் பங்கேற்ற ஆதரவாளர்கள் மர்ம நோயால் அவதி
அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பேரணியில் கலந்து கொண்ட அவரது ஆதரவாளர்கள் சிலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.
செப்டம்பர் 12 அன்று அரிசோனாவின் டக்ஸனில் நடந்த இந்த பேரணியில் சில டிரம்ப் ஆதரவாளர்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பேரணியில் சுமார் 20 பேர் நோய்வாய்ப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் கண்களில் கடுமையான அசௌகரியம் இருப்பதாக கூறியுள்ளனர்.
டிரம்பின் ரசிகரான மேரா ரோட்ரிக்ஸ் (Mayra Rodriguez), கண்கள் எரிவதால் தன்னால் எதையும் பார்க்க முடியவில்லை என்றும், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
மற்றொரு பெண் தனது கழுத்தில் எரிச்சல் இருந்ததாக கூறினார், அதே நேரத்தில் அவரது சகோதரரும் தாங்க முடியாத வலியை அனுபவித்ததாக கூறினார்.
மற்றவர்கள் பார்வைக் குறைபாட்டை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த புகார்கள் குறித்து விசாரித்து வருவதாக டிரம்பின் குழு தெரிவித்துள்ளது.