;
Athirady Tamil News

விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக கணக்குகளை சோதிக்க ஜேர்மன் பொலிசார் திட்டம்

0

ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்களுடைய சமூக ஊடகக் கணக்குகளை சோதிக்கும் திட்டத்தை ஜேர்மன் பொலிசார் முன்வைத்துள்ளார்கள்.

காரணம் என்ன?
ஒருவருடைய சமூக ஊடகக் கணக்குகளைப் பார்க்கும்போதே, அவர் ஏதாவது குழுவைச் சேர்ந்தவரா, அவர் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றுள்ளார், அவரது உண்மையான பணி என்ன என்பதுபோன்ற பல உண்மையான விடயங்களைக் கண்டறியலாம் என்கிறார்கள் ஜேர்மன் பொலிசார்.

ஆகவே, ஒருவரது சமூக ஊடகக் கணக்குகளை சோதிப்பதன் மூலம், அவர் மோசடி செய்ய வாய்ப்புள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம் என்கிறார்கள் அவர்கள்.

Schengen area எனப்படும் 29 ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது.

அதில் மோசடிகளும் அதிகரித்துவருவதால், அவர்களுடைய சமூக ஊடகக் கணக்குகளை சோதிப்பதன் மூலம் அவர்களைக் குறித்த சரியான தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்பதால் இந்த விடயத்தை பரிந்துரைத்துள்ளதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.