புலம்பெயர் பணியாளர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடு
வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முக்கிய இடம் வகிக்கிறது பிரான்ஸ்.
அதிகம் தேடப்படும் பிரான்ஸ் பணிகள்
திறன்மிகுப் பணியாளர்கள் பணி தேடும்போது, அதிக அளவில் பிரான்சில் பணி தேட ஆர்வம் காட்டுவது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
2024ஆம் ஆண்டு, ஜூலை மாத நிலவரப்படி, அதிக ஊதியம் வழங்கும் பணிகள் என்றாலே, வெளிநாட்டவர்கள் பலரும் விரும்புவது பிரான்சைத்தான் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த காலகட்டத்தில், 36 சதவிகிதம் வெளிநாட்டவர்கள், பிரான்சில் அதிக ஊதியம் வழங்கும் பணிகளைத் தேடியுள்ளார்கள்.
அதைத்தொடர்ந்து, நெதர்லாந்தில் பணி கிடைப்பது தொடர்பில் 35 சதவிகிதம் பணியாளர்களும், அமெரிக்காவில் 30 சதவிகிதம் பணியாளர்களும், ஜேர்மனியில் 28 சதவிகிதம் பணியாளர்களும், இத்தாலியில் 23 சதவிகிதம் பணியாளர்களும், ஸ்பெயின் நாட்டில் 21சதவிகிதம் பணியாளர்களும் இணையம் வாயிலாக பணி தொடர்பில் தேடியுள்ளார்கள்.
அதே நேரத்தில், குறைந்த ஊதிய பணிகளை வெளிநாட்டவர்கள் அதிகம் தேடியது அவுஸ்திரேலியாவிலும் ஸ்பெயினிலும்தான்.
47 சதவிகிதம் பேர் அவுஸ்திரேலியாவில் பணி கிடைக்குமா என்றும், 52 சதவிகிதம் பேர் ஸ்பெயினில் பணி கிடைக்குமா என்றும் தேடியுள்ளார்கள்.
பிரான்சைப் பொருத்தவரை, குறைந்த ஊதிய பணிகளை தேடியவர்கள் 33 சதவிகிதம் பேர்தான்.
இப்படி அதிக அளவில் வெளிநாட்டவர்களை பிரான்ஸ் கவர்ந்திருப்பதன் காரணம், அங்கு காணப்படும் எளிய பணி விசா விண்ணப்ப நடைமுறைகள்தான் என்கிறது Indeed நிறுவனம்.
விடயம் என்னவென்றால், 2050ஆம் ஆண்டுவாக்கில் பிரான்சுக்கு 3.9 மில்லியன் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதுதான். தகுதியுடையோருக்கு அது நல்ல செய்தியும் கூட!