தீவிரமடைந்துள்ள போர்: லெபனான் மீது திருப்பியடிக்க ஆரம்பித்துள்ள இஸ்ரேல்
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனான் (Lebanon) பெய்ரூட் (Beirut) பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் (Israel) வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்த தாக்குதலின் மூலம், இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே மோதல் தீவிரமடைந்துள்ளமை புலப்படுகின்றது.
கிட்டத்தட்ட 150 ரொக்கெட்டுகள் லெபனானில் இருந்து இஸ்ரேல் நோக்கி வீசப்பட்ட நிலையில் மத்திய கிழக்கில் நேற்று (20) பதற்றம் நிலவியது.
ரொக்கெட் தாக்குதல்
ரொக்கெட்டுகளின் சரமாரியான தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய இராணுவம் பெய்ரூட்டில் துல்லியமான தாக்குதலை நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலின் முக்கிய குறியாக, ஹிஸ்புல்லாவின் கோட்டையாக அங்கீகரிக்கப்பட கூடிய தஹியே என்ற பகுதி இருந்ததாக லெபனான் பாதுகாப்பு ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் தொலைதொடர்பு சாதனங்கள் வெடிப்பு சம்பவத்தில் கிட்டத்தட்ட 37 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.