இலங்கை வாக்குச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம் – ரஷ்ய தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை
இலங்கை வாக்கு சீட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என ரஷியாவின் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஷெவ்செங்கோ எவ்ஜெனி அறிவுரை வழங்கியுள்ளார்.
இலங்கை வாக்குச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம்
சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர் திட்டத்தில் நெறிமுறை பார்வையாளர்களாக பங்கேற்க ஏழு நாடுகளுக்கு இலங்கை தேர்தல் ஆணையம் முறையான அழைப்புகளை விடுத்திருந்தது.
அதனடிப்படையில், ரஷ்ய கூட்டமைப்பு, மாலத்தீவுகள், பூட்டான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகளின் தலைவர் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுள்ளார்கள்.
இலங்கையில் தேர்தல் கண்காணிப்புப் பணியில் அங்கம் வகிக்கும் ரஷியாவின் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஷெவ்செங்கோ எவ்ஜெனி (Shevchenko Evgenii), காகித வாக்குச் சீட்டுகளுக்குப் பதிலாக இலங்கையில் மின்னணு வாக்குப் பதிவினை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம்(jaffna), திருகோணமலை(trincomale), கொழும்பு(colombo) உள்ளிட்ட இலங்கையில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு சர்வதேச பார்வையாளர்கள் வருகை தரவுள்ளதாக மாலைதீவு(maldives) தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஃபுவாட் தௌஃபீக்(Fuwad Thowfeek) தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் கண்காணிப்பை வலுப்படுத்த தேர்தல் ஆணையம் உள்ளூர் பார்வையாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாகச் செயற்படும் வகையில், 80 கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.