உலகே உற்று நோக்கும் ஜனாதிபதி தேர்தல் – பதிவான மொத்த வாக்கு வீதம்
புதிய இணைப்பு
இலங்கையின் (srilanka) 9 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.
அதன்படி, இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, கொழும்பு – 75% – 80% கம்பஹா – 80% நுவரெலியா – 80% இரத்தினபுரி – 75% பதுளை – 73% மொனராகலை – 77% அம்பாறை – 70% புத்தளம் – 78% திருகோணமலை – 63.9% கேகாலை – 72% கிளிநொச்சி – 68% குருநாகல் – 70% பொலன்னறுவை – 78%
மூன்றாம் இணைப்பு
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.
அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி வாக்களித்த வாக்காளர்களின் சதவீதம் கீழ்வருமாறு:
நுவரெலியா 70%
காலி 45%
மாத்தறை 40%
குருணாகல் 50%
புத்தளம் 42%
அநுராதபுரம் 50%
பொலன்னறுவை 55%
மொனராகலை 62%
திருகோணமலை 51.7%
அம்பாறை 30%
இரத்தினபுரி 55%
கம்பஹா 52%
கொழும்பு 50%
கேகாலை 49%
வன்னி 46.82%
கண்டி 40%
பதுளை 40%
யாழ்ப்பாணம் 45%
களுத்துறை 60%
இரண்டாம் இணைப்பு
2024 ஆம் ஆண்டுக்காண ஜனாதிபதி தேர்தலில் நண்பகல் 12.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நுவரெலியா – 45% காலி – 42% மாத்தறை – 35% குருநாகல் – 50% புத்தளம் – 42% அனுராதபுரம் – 50% பொலனறுவை – 44% மொனராகலை – 32% யாழ்ப்பாணம் – 35% மன்னார் – 38%
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகளானது இன்று (21) காலை ஏழு மணியிலிருந்து நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.
அரசியல் வட்டாரங்கள்
இதனடிப்படையில், இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
களுத்துறை – 32%
கம்பஹா – 25%
கேகாலை – 15%
நுவரெலியா – 30%
இரத்தினபுரி – 20%
அம்பாறை- 30%
மன்னார்- 29%
முல்லைத்தீவு – 25%
வவுனியா – 30%
கொழும்பு – 20%
கண்டி – 20%
காலி – 18%
மாத்தறை – 30%
மட்டக்களப்பு – 17%
குருநாகல் – 30%
பொலனறுவை – 38%
மொனராகலை – 21%
பதுளை – 21%
மேலும், நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மாலை நான்கு மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.