ஈரானில் விச வாயு வெடிப்பு: சுரங்கத்தில் 50 பேர் பலி
ஈரான் (Iran) நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட மீத்தேன் வாயு வெடிவிபத்து காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வெடிவிபத்தானது , சனிக்கிழமை இரவு 9 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
மாகாண ஆளுநர்
சம்பவத்தின் போது 69 ஊழியர்கள் சுரங்கத்தில் இருந்துள்ளதாக மாகாண ஆளுநர் ஜாவத் கெனாட்சாதே (Javad Ghenaatzadeh) தெரிவித்துள்ளார்..
தெற்கு கொராசன் மாகாணத்தில் நடந்த இந்த வெடிப்பில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
மீத்தேன் வாயு
தபாஸில் அமைந்துள்ள இந்த சுரங்கத்தின் இரண்டு தொகுதிகளில் மீத்தேன் வாயு கசிவால் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
வெடிப்பை அடுத்து, முதற்கட்டமாக 30 பேர்கள் இறந்துள்ளதாகவே தகவல் வெளியானது. ஆனால், அதன் பின்னர் 51 பேர்கள் இறந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 20 கடந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான் இரங்கல் தெரிவித்துள்ளதுடன். இந்த வெடிவிபத்து பற்றி விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.