;
Athirady Tamil News

கடல் தீர்த்தத்தின் போது காணாமல் போன ஆசிரியரின் சடலம் ஒப்படைப்பு

0

யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் ஆலய கடல் தீர்த்தத்தின் போது , கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட ஆசிரியரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கடல் தீர்த்தத்தின் போது , வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான நுணாவில் பகுதியை சேர்ந்த தயாசீலன் வைஷ்ணவன் (வயது 28) என்பவர் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை தமிழக கடற்பரப்பை அண்டிய பகுதியில் கடலில் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

சடலத்தின் உடற்கூற்று பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

அதேவேளை கடல் தீர்த்தத்தின் போது குடத்தனையை சேர்ந்த கந்தசாமி வினோகரன் (வயது 54) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இம்முறை கடல் தீர்த்தத்தின் போது இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தமை பக்தர்கள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.