;
Athirady Tamil News

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு விவகாரம் : கைதானவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

புதிய இணைப்பு
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (23) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஒக்டோபர் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டடுள்ளார்.

முதலாம் இணைப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் மேலும் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மஹரகம, தேசிய கல்வி நிறுவகத்தில் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வட்ஸ்அப் ஊடாக பரிமாறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பரீட்சைகள் திணைக்களம்
இந்தநிலையில், வினாத்தாள் கசிந்ததுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பரீட்சைகள் திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி விசாரணைகளை நடத்தியது.

இதையடுத்து, புலமைப்பரிசில் வினாத்தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் அந்த மூன்று வினாக்களின் மதிப்பெண்களை சமமாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு, பரீட்சையின் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகிர்ந்த பாடசாலை அதிபரும் ஆறு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது, மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 18 ஆம் பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.