;
Athirady Tamil News

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜேர்மனியின் ஆளும் கட்சி

0

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்றுவரும் நிலையில், இடைத்தேர்தல்கள் பெருமளவில் கவனம் ஈர்த்துவருகின்றன.

இடைத்தேர்தல் முடிவுகள், பொதுத்தேர்தல் முடிவுகளை கணிப்பவையாக கருதப்படும் நிலையில், ஒவ்வொரு தொகுதி தேர்தல் முடிவும் உற்றுக் கவனிக்கப்படுகின்றது.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜேர்மனியின் ஆளும் கட்சி

இந்நிலையில், அதேபோன்றதொரு சூழலைக் கடந்துவந்த ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் சார்ந்த Social Democratic Party (SPD) கட்சி, ஜேர்மன் மாகாணமாக Brandenburgஇல் நடைபெற்ற தேர்தலில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

விடயம் என்னவென்றால், ஜேர்மனியில், குறிப்பாக, கிழக்கு ஜேர்மனியில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி மக்களிடையே பேராதரவைப் பெற்றுவருகிறது.

சமீபத்தில் கிழக்கு ஜேர்மனியின் இரண்டு மாகாணங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் AfD கட்சியே வெற்றிபெற, அது ஆளுங்கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், Brandenburgஇல் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஓலாஃப் ஷோல்ஸ் சார்ந்த SPD கட்சி வெற்றி பெற்றுள்ளது, அக்கட்சிக்கு பெறும் ஆறுதலாக அமைந்துள்ளது.

என்றாலும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது. SPD கட்சிக்கு 30.9 சதவிகித வாக்குகள் கிடைக்க, வலதுசாரிக் கட்சியான AfD கட்சிக்கு 29.2 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது.

அத்துடன், தேர்தலில் வலதுசாரிக் கட்சியான AfD கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.