இஸ்ரேலின் உக்கிரமான தாக்குதல்: 100 பேர் பலி
தெற்கு லெபனான் (Lebanon) நாட்டில் உள்ள ஈரான் (Iran) ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் மீது இஸ்ரேல் (Israel) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று இஸ்ரேல் நடத்திய குறித்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதுடன் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் இன்று சரமாரியாக குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
உக்கிரமான தாக்குதல்
சுமார் 300 இடங்களை குறிவைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதாகவும், 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
ஒக்டோபர் மாதம் தொடங்கிய மோதலுக்குப் பிறகு லெபனானில் நடத்தப்படும் மிக உக்கிரமான தாக்குதல் இதுவாகும்.
இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் இராணுவம், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில் “லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீதான தாக்குதல்களுக்கு இராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி ஒப்புதல் அளித்திருப்பதாகவும், இன்று 300 இற்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகள் தாக்கப்பட்டதாகவும்” தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஹெர்சி ஹலேவி மற்றும் பிற இஸ்ரேல் தலைவர்கள் கூறியுள்ளனர்.