நாளொன்றிற்கு 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை உமிழும் எரிமலை: ஒரு சுவாரஸ்ய செய்தி
உலகிலேயே உயரமானது என்னும் பெருமைக்குரியதான ஒரு எரிமலை, நாள்தோறும் தங்கத்தையும் உமிழ்வதாகக் கூறும் சுவாரஸ்ய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
நாள்தோறும் தங்கத்தை உமிழும் எரிமலை
அண்டார்டிகாவில் அமைந்திருக்கும் Mount Erebus என்னும் எரிமலை, நீராவியையும், வாயுக்களையும் வெளியிடுவதுடன், தங்கத் துகள்களையும் உமிழ்கிறது.
அது, நாளொன்றிற்கு 5,000 பவுண்டுகள், அதாவது, இலங்கை மதிப்பில், 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை உமிழ்கிறது.
எரிமலையிலிருந்து 621 மைல் தொலைவு வரையிலும் இந்த தங்கத் துகள்கள் பரவிக்கிடக்கின்றன.
எதனால் இந்த எரிமலை இப்படி தங்கத் துகள்களை உமிழ்கிறது என்பது புரியாமல் அறிவியலாலர்களே மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் நிலையில், ஆண்டொன்றிற்கு 1.5 மில்லியன் பவுண்டுகள், அதாவது, 60,67,35,513.45ரூபாய் மதிப்புடைய தங்கத்தை Mount Erebus எரிமலை வெளியிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனாலும், தங்கம் கிடைக்கிறது என்பதற்காக, அதை யாராவது சேகரிக்கச் செல்ல நினைத்தால், திடீரென எரிமலை வெடிக்கும் அபாயமும் உள்ளது என்பதையும் மறந்துவிடவேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.