விஜயின் அரசியல் மாநாட்டிற்கு வருபவர்கள் பின்பற்ற வேண்டிய 8 விடயங்கள்
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் புஸ்ஸி ஆனந்த் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.
இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளார்.
இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு ஒக்டோபர் 27 -ம் திகதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு 8 கோரிக்கைகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் விடுத்துள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.
கோரிக்கைகள்
* தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு வரும் கட்சி தோழர்கள் மது அருந்திவிட்டு வரக்கூடாது.
* பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
* சாலையில் செல்ல கூடிய வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது.
* இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில் ஈடுபட கூடாது.
* அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும்.
* கிணறு உள்ளிட்ட ஆபத்தான பகுதிகள் இருந்தால் தீவிர கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.
* மருத்துவக் குழு மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு ஏற்ற வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
* பேருந்து, வேன்களில் தகுந்த எண்ணிக்கையில் தொண்டர்களை அழைத்து வரவேண்டும்