;
Athirady Tamil News

உலக சுற்றுலா நாள் நிகழ்வு பற்றிய ஊடக விவரிப்பு

0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்வுகளின் வரிசையாக உலக சுற்றுலா தினத்தினை “சுற்றுலாவும் அமைதியும்” என்ற தொனிப்பொருளில் இந்தியாவின் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறப்பிக்கும் முகமாக முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகள், செப்டெம்பர் 27ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் நடைபெற இருப்பதோடு செப்டெம்பர் 27 – 29ஆம் திகதி வரை காலை 10 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை உணவு மற்றும் கைப்பணிப் பொருள் சந்தை, கலாசாரத் திருவிழா, மாணவர்களின் உணவுச்சந்தை போன்றன யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறக் காத்திருக்கின்றது.

முதலாம் நாள் நிகழ்வு “சுற்றுலாவும் அமைதியும்“ என்ற தொனிப்பொருளில் ஆய்வரங்காக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஆராத சுருதி உரையினை
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் பிறேம குமார டி சில்வா அவர்கள் நிகழ்த்தவுள்ளார். மற்றுமொரு ஆராத சுருதி உரையினை Jetwing
Symphony குழுமத்தின் தலைவர் கிரான் குரே தரவுள்ளார்.

தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடலில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தலைவரும் பேராசிரியருமான R.C அனு சந்திரன், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சுற்றுலாத்துறைக் கலாநிதி வெங்கட் ராவோ, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் சமூகவியல் கற்கைகளின் தலைவர் கலாநிதி S பத்மநேசன், Airport and Aviation Service SriLanka தனியார் நிறுவனத்தினுடைய சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் துறைத் தலைவர் சிமித் டி சில்வா கலந்து கொள்ள உள்ளனர்.

இரண்டாம் நாள் நிகழ்வாக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த பேராசிரியர்களால் வடமாகாண சுற்றுலா மற்றும் தொழில்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தொழில்திறன் மேம்படுத்தல் செயலமர்வுகள் நடைபெற உள்ளன.

மூன்றாம் நாள் நிகழ்வுகளாக கலைநிகழ்வுகளும் பண்பாட்டு அமர்வுகளும் இடம்பெற உள்ளன.

இந்த நிகழ்வுகளுக்கு சமாந்தரமாக செப்ரம்பர் 27ம் திகதி “ 29ம் திகதி வரை காலை 10 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை சிறிய நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சிகளும் சந்தையும் நடைபெற உள்ளன.

அத்தோடு இம் மூன்று நாட்களும் மாலை 6 தொடக்கம் இரவு 9 மணி வரை கைலாசபதி கலையரங்கில் கலை நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன.
https://drive.google.com/file/d/1BQLDmAEGXdnJgpqqbt5L6bgDyYVrE_Mz/view?usp=drive_web

Media invite tamil 1

You might also like

Leave A Reply

Your email address will not be published.