அமெரிக்காவில் கடத்தப்படும் சிறுவர் சிறுமிகள்! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவிற்குள் தூக்க மருந்து கொடுத்து 8 முதல் 10 வயதுடைய சிறுவர் சிறுமிகளை கடத்தி செல்லும் நிகழ்வும் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை கடத்தும் நபர்கள், சிறுவர்களின் பிறப்பு சான்றிதழ்களை வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையான பெற்றோர் கிடையாது.
இதுபோன்று நிறைய குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை வைத்துக்கொண்டு அமெரிக்காவுக்குள் நுழையும் நபர்களை எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் பொலிஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதில், இந்த கடத்தல் சம்பவங்கள் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.
நாங்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என கூறிக்கொண்டு, கடத்தல்காரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இதுபோன்று ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமிகள் அமெரிக்காவுக்குள் கடத்தி கொண்டு வரப்படுகின்றனர் என பொலிஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், கடத்தி வரப்பட்ட பின்னர், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவர்களில் பலர் குழந்தை தொழிலாளர்களாகவோ அல்லது பாலியல் தொழிலாளி, பாலியல் சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படும் ஆபத்துக்கு தள்ளப்படுகின்றனர்.