சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோருக்கு மோசமான ஒரு தகவல்
சுவிட்சர்லாந்து விரைவில் மூன்றாவது நாடொன்றில் வைத்து புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க திட்டமிட்டுவருகிறது.
பிரித்தானியாவின் ருவாண்டா திட்டம் போன்றதா?
சுவிட்சர்லாந்து விரைவில் மூன்றாவது நாடொன்றில் வைத்து புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க திட்டமிட்டுவருவதாக சுவிஸ் நீதித்துறை அமைச்சரான Beat Jans தெரிவித்துள்ளார்.
ஆனாலும், இத்திட்டம் பிரித்தானியாவின் ருவாண்டா திட்டம் போன்றதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் விதியும், அடிப்படை உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், மூன்றாவது நாடொன்றில் வைத்து புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கப்பட்டாலும், அவற்றை பரிசீலிப்பது சுவிஸ் அதிகாரிகளாகத்தான் இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.