பொதுத்தேர்தல் தொடர்பில் மொட்டுக்கட்சி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மக்களின் நிலைப்பாடு வாக்குகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மகிந்த அறிவிப்பு
அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கட்சி என்ற ரீதியில் நாம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை.
எனினும் பொதுத் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிடவுள்ளோம். எந்தவகையிலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படப் போவதில்லை” என்றார்.
இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி தேர்தல் முறைமையை மாற்றியமைக்க தேசிய மக்கள் சக்தி முன்வந்தால் சிறிலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவையும் வழங்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்(slpp) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார்.
மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கிய நாமல் ராஜபக்ச 342781 வாக்குகளை பெற்று படு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.