குறைக்கப்பட்ட அமைச்சர்களின் சலுகை: தொடர் நகர்வுகளில் அநுர
அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல அரச வாகனங்கள் புதிய நிர்வாகத்திற்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அமைச்சு அதிகாரிகள் வாகனங்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
எதிர்கால நடவடிக்கை
குறித்த வாகனங்கள் தொடர்புபட்ட அமைச்சுக்களிலும், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் படி, புதிய ஆட்சியின் பின்னர் வாகனங்களை திருப்பி அனுப்புமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதால், எஞ்சும் வாகனங்களை ஜனாதிபதி என்ன செய்வார், எதிர்காலத்தில் அவை எவ்வாறு ஒதுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.