ஈரான் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட தகவலால் பரபரப்பு
ஈரானிடமிருந்து(iran) தனது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்(donald trump) இன்று (25) தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பை கொல்ல ஈரானில் முயற்சி நடப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்ததாக அவரது ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் குழு கூறியதை அடுத்து டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
தயார்நிலையில் அமெரிக்க இராணுவம்
சமூக ஊடக தளத்தில் ஒரு குறிப்பை வெளியிட்ட டிரம்ப், ஈரானில் இருந்து தனது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், அமெரிக்க இராணுவம் எச்சரிக்கையாகவும் அதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஈரான் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஆனால் அவை தோல்வியடைந்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
அதேபோன்று தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்க ஈரான் எதிர்காலத்தில் மீண்டும் முயற்சிக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.
அமெரிக்க தேசிய புலனாய்வு சேவையின் இயக்குனர் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரானின் உண்மையான மற்றும் குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் குறித்து டிரம்பிடம் தெரிவித்தார்.
டிரம்பை பாதுகாக்க நடவடிக்கை
மேலும் அமெரிக்காவை சீர்குலைத்து குழப்பமான சூழ்நிலையை உருவாக்குவது ஈரானின் நம்பிக்கை என்று டிரம்ப் ஜனாதிபதி பிரச்சாரத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீபன் சாங் கூறினார்.
சாங் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புலனாய்வு அதிகாரிகள் ஈரானின் அச்சுறுத்தல்களை அறிந்துள்ளனர் மற்றும் டிரம்பை பாதுகாக்கவும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்தவும் பணியாற்றி வருகின்றனர்.
ஏற்கனவே இரண்டுமுறை ட்ரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.