தெற்காசியாவின் முதல் நாடு! ஒரே பாலின திருமணத்துக்கு தாய்லாந்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம்
தெற்கு ஆசியாவிலேயே முதல் நாடாக தாய்லாந்து ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி உள்ளது.
தாய்லாந்து அரசர் மகா வஜிரலோங்க்கோர்(King Maha Vajiralongkorn), வரலாற்று சிறப்புமிக்க ஒரே பாலின திருமண சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
இதன் மூலம் தெற்கு ஆசியாவில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் முதல் நாடு தாய்லாந்து ஆகியுள்ளது.
இந்த புதிய சட்டம், வரும் ஜனவரி 2025 முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் LGBTQ+ தம்பதிகள் தங்கள் திருமணத்தை சட்டபூர்வமாக பதிவு செய்ய முடியும்.
ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
சட்டத்தை ஆதரிக்கும் செயல்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதை மிகப்பெரிய சாதனை என்று பாராட்டியுள்ளனர்.
தாய்லாந்து, ஆசியாவில் தைவான் மற்றும் நேபாளுக்கு பிறகு ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் மூன்றாவது நாடு ஆகும்.
புதிய சட்டம், ஒரே பாலின தம்பதிகளுக்கு முழுமையான சட்ட, நிதி மற்றும் மருத்துவ உரிமைகளை வழங்குகிறது.