;
Athirady Tamil News

பிரித்தானியாவில் 6,000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடல்., வெளியான அதிர்ச்சித் தகவல்

0

பிரித்தானியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 6,000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் புதிய தரவுகள் வெளியாகியுள்ளன.

2015 முதல் 6,161 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக Which? வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், மூடப்பட்டுள்ள கிளைகள் மொத்த வங்கி வலையமைப்பின் 62% ஆகும்.

பிரித்தானியாவின் யார்க்ஷையர் மற்றும் ஹம்பர் பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வங்கி கிளைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.

இப்பகுதியில் 5.6 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர், ஆனால் அவர்களுக்கு சேவை செய்யும் வங்கிக் கிளைகள் வெறும் 248 மட்டுமே இருக்கின்றன. இது, 100,000 மக்களுக்கு 4.4 கிளைகள் என்ற விகிதமாகும்.

இதன் விளைவாக, ஒவ்வொரு யார்க்ஷையர் குடிமகனும் 22,557 பேருடன் ஒரு கிளையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

2015 ஜனவரியில், யார்க்ஷையர் மற்றும் ஹம்பர் பகுதியில் 728 கிளைகள் இருந்தன. அது, 100,000 மக்களுக்கு 13 கிளைகள் என்ற அளவாக இருந்தது. ஆனால் பின்னர், இவற்றில் இரண்டு முக்கால் பகுதி கிளைகள் மூடப்பட்டு, 480 கிளைகள் குறைந்துள்ளன.

ஸ்கொட்லாந்து பகுதியில் 100,000 மக்களுக்கு 6.9 கிளைகள் என்ற விகிதத்துடன் சிறந்த கிளை அணுகலைக் கொண்டுள்ளது. அதே சமயம், நாட்டின் பிற பகுதிகளில் இருப்பவர்கள் இன்னும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு வங்கிகளுக்கு செல்வது அவசியமாகியுள்ளது.

மேற்குப் மிட்லாந்து பகுதி 100,000 மக்களுக்கு ஆறு கிளைகளுடன் சிறிது சிறந்த நிலையில் உள்ளது. எனினும், கிழக்கு மிட்லாந்து பகுதியில், 100,000 மக்களுக்கு வெறும் 4.6 கிளைகள் மட்டுமே இருக்கின்றன.

பிரித்தானியாவின் 30 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரே ஒரு வங்கிக் கிளையும் இல்லை. இப்பகுதிகளில் 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதன் சில பகுதிகளில் பிராட்ஃபோர்ட் சவுத், லிவர்பூல் வேவர்ட்ரீ மற்றும் மாஞ்செஸ்டர் ரஷோல்மே அடங்குகின்றன.

இதனால், 56 பகுதிகளில் வெறும் ஒரு கிளை மட்டுமே இருந்து வருகிறது. வங்கிக் கிளைகள் மூடப்பட்டதில் உள்ளூர் சமூகங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன, குறிப்பாக முதியோர்கள், குறைவான வருமானம் கொண்டவர்கள், உடல் நிலைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அண்மையில், புதிய விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விதிகள், ஒரு கிளை மூடுவதற்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள மக்களின் பண தேவைகளைப் பரிசீலிக்க வங்கிகளுக்கு கட்டாயமாக்குகின்றன.

Which? பத்திரிகையின் துணை ஆசிரியர் சாம் ரிச்சார்ட்சன், “வங்கிக் கிளைகள் மூடுவதால் உள்ளூர் சமூகங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. இனி Mobile Banking துறை வளர்ச்சியடைவதை வங்கி மேலாளர்கள் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.